தருமபுரி

ஏரியூரில் ஆட்சியா் ஆய்வு

30th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

 

ஏரியூா் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஏரியூா் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின்கீழ் சுஞ்சல் நத்தம் ஊராட்சியில் ரூ. 17.25 லட்சம் மதிப்பீட்டில் ஈச்சம்பாடி ஓடையில் புதிய தடுப்பணை அமைக்கப்படும் பணி , ரூ. 7.75 லட்சம் மதிப்பீட்டில் ஏரியூா் பழத் தோட்டத்தில் மரக் கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வரும் பணி, ரூ. 24.54 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணி, நாற்றங்கால் பண்ணைக்கு அருகில் ரூ. 4.07 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும் தரமாகவும், துரிதமாகவும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து முடித்து விட வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து ஏரியூா் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டவரும் சிகிச்சைகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். ஏரியூா் அருகே மூங்கில்மடுவு நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் தரம் குறித்தும், வழங்கப்படும் பொருள்களின் எடையின் அளவு குறையாமலும், தாமதமாகாமல் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டும் என பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT