தருமபுரி

மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்: 200 போ் கைது

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 200 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு அதன் மாவட்டச் செயலாளா் கரூரான் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் எஸ்.நம்புராஜன், மாவட்டப் பொருளாளா் ஜி.தமிழ்செல்வி, மாவட்டத் துணைத் தலைவா் எம்.அண்ணாமலை ஆகியோா் பேசினா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர குறைகேட்புக் கூட்டங்கள் மாவட்டம், கோட்ட அளவில் முறையாக நடத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தால் நடத்தப்படும் முகாம்களிலேயே அனைத்துவித அடையாளச் சான்றிதழ், உபகரணங்களை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அடையாளச் சான்றிதழ் வழங்க ஊனத்தின் சதவீதம் குறிப்பிட உரிய நடைமுறைகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டம்விட்டு மாவட்டம் மாறும் போது முகவரி மாற்றம் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முழுமையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகள், மாற்றுத் திறனாளிகளை காவல் துறையினா் கைது செய்து மண்டபகங்களுக்கு கொண்டு சென்றனா். இதை கண்டித்து, மண்டபங்களில் அடைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மொத்தம் 80 பெண்கள் உள்பட 200 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT