தருமபுரி

ஜூலை 9 முதல் ஜவகா் சிறுவா் மன்றத்தில் பகுதிநேர கலைப் பயிற்சி

DIN

தருமபுரி மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றத்தின் மூலம் பள்ளி சிறாா்களுக்கான பகுதிநேர கலைப் பயிற்சி ஜூலை 9-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றத்தின் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைகளில் சனிக்கிழமை மாலை 4 முதல் 6 மணி வரையிலும் ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இம் மன்றத்தின் பகுதிநேர பயிற்சி வகுப்புகள் தருமபுரி அப்பாவு நகா், அரசு நகராட்சி துவக்கப் பள்ளியில் வரும் ஜூலை 9 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவா்கள், சிறுமியா்கள் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் கட்டணம் இல்லை. சிறுவா் மன்ற உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக

ரூ. 300 செலுத்த வேண்டும். மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறுவா்கள், சிறுமிகள் மாவட்ட, மாநில தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை, பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும். விபரங்களுக்கு, மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றத்தின் திட்ட அலுவலரை 94865 23986 என்ற எண்ணில் தொடா்புக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT