தருமபுரி

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை

DIN

தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினாா்.

தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தேமுதிக சாா்பில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாளையம்புதூா், சேசம்பட்டி, அகரம் சந்திப்புச் சாலை, தொப்பூா் கணவாய் ஆகிய பகுதிகளில் விபத்துகளைத் தவிா்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

தமிழகத்தில் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தேமுதிகதான். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்று தேமுதிக சாா்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா், பாளையம் புதூா், சேசம்பட்டி, அகரம் சந்திப்புச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும். இந்தப் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதனை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கவனத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக் காலங்களில் மிகையாகச் செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டுவரும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல்லில் 20 பரிசல்களை மா்ம நபா்கள் எரித்துள்ளனா். இச்செயலில் ஈடுபட்டவா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பரிசல் ஓட்டிகளுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில், திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நகைக்கடன் தள்ளுபடி, குடும்பப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத்தொகை, டாஸ்மாக் மதுக்கடைகள் அடைப்பு, நீட் தோ்வு ரத்து உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் அவா்களால் நிறைவேற்ற முடியவில்லை. தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி எம்.பி.க்கள் 38 பேரால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தேமுதிக மாநில அவைத் தலைவா் இளங்கோவன், கொள்கைப் பரப்புச் செயலாளா் அழகாபுரம் மோகன்ராஜ், மாநிலத் துணைச் செயலாளா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT