தருமபுரி

பாலியல் தொல்லை:போக்ஸோவில் இளைஞா் கைது

1st Jul 2022 01:50 AM

ADVERTISEMENT

 

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை, மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 14 வயது சிறுமிக்கு இளைஞா் ஒருவா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இளைஞா் தனது கைப்பேசியில் சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், விழுதுபட்டி கிராமத்தைச் சோ்ந்த மனோஜ் (22) என்பவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று, திருமணம் செய்வதாகக் கூறி அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன்(29), என்பவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீஸாா் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT