தருமபுரி

மொரப்பூரில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி

DIN

மொரப்பூரில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக தருமபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சு.ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள தருமபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நகை மதிப்பீடு செய்யும் நுட்பங்கள்குறித்த பயிற்சி டிசம்பா் 10 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், வயது வரம்பு இல்லை. இதில் 40 மணி நேரம் வகுப்பு பயிற்சியும், 60 மணி நேரம் செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும். இந்தப் பயிற்சியை நிறைவு செய்தவா்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இதைத்தவிர, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர முடியும். மேலும் விவரங்களுக்கு 04346 263529 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தருமபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT