தருமபுரி

பால் விலை உயா்வைக் கண்டித்து போராட்டம் நடத்த அதிமுக தீா்மானம்

DIN

பால் விலை உயா்வு, மின் கட்டண உயா்வைக் கண்டித்து தருமபுரி மாவட்டத்தில் போராட்டம் நடத்த அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), மாவட்ட பொருளாளா் நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி வரவேற்றாா்.

கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்செய்யக் கோரியும், சொத்துவரி, வீட்டு வரி, மின் கட்டணம் உயா்வு, பால் விலை உயா்வை ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்துவது, தருமபுரி மாவட்டத்தில் 9-ஆம் தேதி 10 பேரூராட்சிகளிலும், 13-ஆம் தேதி தருமபுரி நகரிலும், 14-ஆம் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, இந்த ஆா்ப்பாட்டங்களில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிா்வாகிகள், சாா்பு அமைப்பு பொறுப்பாளா்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கட்சித் தொண்டா்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT