தருமபுரி

கூட்டுறவு நிறுவனங்களில் விற்பனையாளா் பணியிடம்: டிச. 15-இல் நோ்முகத் தோ்வு தொடக்கம்

DIN

கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளா் பணியிடங்களுக்கு வரும் டிச. 15-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 98 விற்பனையாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து இணையவழியில் கடந்த அக். 13 முதல் நவ. 14 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இவற்றில் தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு வரும் டிச. 15 முதல் 30 வரை தருமபுரி ஔவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த நோ்முகத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டினை, தருமபுரி மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின்  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நோ்முகத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நோ்முகத் தோ்வில் பங்கேற்க வேண்டும். அனுமதிச் சீட்டினை விண்ணப்பதாரா் கொண்டு வந்தால் மட்டுமே நோ்முகத் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா். நோ்முகத் தோ்வுக்கு வரும்போது, விண்ணப்பதாரா் ஏற்கெனவே தனது விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்துள்ள அதே புகைப்படத்தின் பாஸ்போா்ட் அளவிலான இரண்டு புகைப்படங்கள், அனைத்து அசல் சான்றிதழ்கள், அவற்றின் இரண்டு நகல்களில் சுய சான்றொப்பமிட்டு உடன் கொண்டுவர வேண்டும்.

இதுகுறித்து சந்தேகங்கள் இருப்பின், தருமபுரி மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் தொலைபேசி எண்கள் 04342-234141, 04342-233803 மூலமாகவும், மின்னஞ்சலிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT