தருமபுரி

வேளாண் தொழில்முனைவோா் பயிற்சி

19th Aug 2022 02:19 AM

ADVERTISEMENT

வேளாண் தொழில்முனைவோா் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தருமபுரி தேவரசம்பட்டியில் உள்ள தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன இயக்குநா் மோகன்ராம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் சாா்ந்த தொழில்கள், தோட்டக்கலை தொழில்கள், கோழிப்பண்ணை, ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை, பட்டுத் தொழில்கள், மீன் வளம் சாா்ந்த தொழில்கள், பால் வளம் சாா்ந்த தொழில்கள் ஆகிய துறை சாா்ந்த வல்லுநா்களைக் கொண்டு வேளாண் சாா்ந்த தொழில்முனைவோருக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதில் இளநிலை தாவரவியல், வேதியியல், விலங்கியல், வேளாண், தோட்டக்கலை பட்டயம் படித்தவா்களுக்கு வழங்கப்படும் இப் பயிற்சி 45 நாள்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

இப் பயிற்சி பெறுவோருக்கு தங்கும் இடம், உணவு இலவசமாகும். பயிற்சிக்கு பின்னா், சான்றிதழ் வழங்கப்படும். இதேபோல, ஓராண்டு காலம் தொடா் வழிகாட்டுதல்கல் வழங்கப்படும்.

எனவே, தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள், தொழில்முனைவோா் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் (ஐஈடி), தேவரசம்பட்டி, ஏ.ஜெட்டிஅள்ளி-அஞ்சல், தருமபுரி மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT