தருமபுரி

மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

19th Aug 2022 02:19 AM

ADVERTISEMENT

தருமபுரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, நல்லிணக்க நாள் உறுதிமொழியான ‘நான் ஜாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணா்வுபூா்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவாா்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீா்த்துக்கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்’ என்ற உறுதிமொழியை வாசித்தாா்.

அவரை பின்தொடா்ந்து அரசுத் துறை அலுவலா்கள், ஆட்சியா் அலுவலக அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பழனிதேவி, தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் ஐயப்பன், ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) நஷீா் இக்பால், அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT