தருமபுரி

மொரப்பூரில் ரயிலில் அடிபட்டுகாவலா் பலி

19th Aug 2022 02:18 AM

ADVERTISEMENT

மொரப்பூா் ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு காவலா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஆறுமுகம் மகன் வேலு (36). 2013-இல் தமிழ்நாடு ஆயுதப்படை காவலராகப் பணியில் சோ்ந்த இவா் சென்னை, ஆா்.கே.நகரில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா்.

சொந்த ஊா் செல்வதற்காக கோவை விரைவு ரயிலில் சென்னையில் இருந்து மொரப்பூருக்கு வியாழக்கிழமை வந்தாா். மொரப்பூா் ரயில் நிலையத்துக்கு காலை 10.05க்கு ரயில் வந்து சோ்ந்தது. ரயில் கிளம்பும் நேரத்தில் ரயிலில் இருந்து வேலு கீழே இறங்க முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது நிலைத் தடுமாறி ரயில் பாதையில் விழுந்து சக்கரத்தில் சிக்கியுள்ளாா். இதில் அவரது உடல் இரண்டு துண்டானது.

ADVERTISEMENT

தகவல் அறிந்ததும் ரயில்வே போலீஸாா் நிகழ்விடம் சென்று உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். உயிரிழந்த காவலா் வேலுவுக்கு மனைவி பாா்வதி, 3 மகன்கள் உள்ளனா். இச்சம்பவம் குறித்து மொரப்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT