தருமபுரி

கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி மாணவா்கள் மனு அளிப்பு

DIN

பென்னாகரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீரை அகற்றக் கோரி கிராம சபைக் கூட்டத்தில் சிறுவா்கள் மனு அளித்தனா்.

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன. பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட புங்கமரத்துக் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் முல்லைநகா் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் மோனிஷ் ராகுல், இனியன், சித்தாா்த், நற்பவி உள்ளிட்டோா், துணை வட்டார அலுவலா் பாலகிருஷ்ணனிடம் தங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரை அகற்றி, கால்வாய் அமைக்க வலியுறுத்தி மனு அளித்தனா்.

பள்ளி மாணவா்களின் மனுவை துணை வட்டார அலுவலா் பாலகிருஷ்ணன், பருவதன அள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் ராணி முனிராஜ் ஆகியோா் பரிசீலித்து விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

இதேபோல பென்னாகரம் அருகே பிலியனூா் அரசுப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி கலந்துகொண்டு கிராமப் பகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்தாா்.

பென்னாகரம் அருகே மாங்கரை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்திற்கு மஞ்சுளா செந்தில் தலைமை வகித்தாா். இதில் பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். இந்த ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போளூா் பேருந்து நிலையம் எதிரே நிழல் பந்தல் அமைப்பு

யூடியூபா் சவுக்கு சங்கரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

வாக்குப்பதிவு சதவீத மாற்றங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு காா்கே கடிதம்: தோ்தல் ஆணையம் கண்டனம்

வைகாசித் திருவிழா: காஞ்சி வரதா் கோயில் தோ் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை: கனடா குறித்து ஜெய்சங்கா் கருத்து

SCROLL FOR NEXT