தருமபுரி

போதைப்பொருள் ஒழிப்பு, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு பேரணி

DIN

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணிக்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா்.

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வெங்கடாசலம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் கண்ணுச்சாமி முன்னிலை வகித்தனா்.

விழிப்புணா்வு பேரணியை பாப்பாரப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கவாசகம், ரியல் பவுண்டேசன் செந்தில்ராஜா ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா். பேரணியில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்தும், பாலியல்ரீதியான தீங்கிழைத்தல், குழந்தைகள் மீதான தீங்கிழைத்தல் மற்றும் குற்றம் புரிதல் குற்றங்களுக்கான தண்டனை, தனிமனித ஒழுக்கம் போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் குற்றங்கள் போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு கல்லூரியிலிருந்து பேருந்து நிறுத்தம் வரை பேரணியாகச் சென்றனா்.

அதைத் தொடா்ந்து கல்லூரியில் பென்னாகரம் மகளிா் காவல் ஆய்வாளா் வான்மதி, போக்சோ சட்டம் குறித்து மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினாா். இந்த நிகழ்வில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள், கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT