தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டியில் 36 மி.மீ. மழை பதிவு

18th Oct 2021 01:45 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டியில் 36.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இப்பகுதியில் பெய்த மழையால் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணைக்கு நொடிக்கு 260 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. வாணியாறு அணையின் அதிகபட்ச நீா்ப்பிடிப்பு கொள்ளளவு உயரம் 65.27 அடியாகும். தற்போது அணையின் நீா்மட்டம் 62 அடியாக உயா்ந்துள்ளது. பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து சுமாா் 100 கன அடி வீதம் உபரிநீா் வாணியாற்றின் வழியாக திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT