தருமபுரி

அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

DIN

அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 5-ஆவது மாநாடு தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் சி.கவிதா தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் மங்கையா்க்கரசி கொடியேற்றி வைத்தாா். மாவட்ட இணைச் செயலா் ஏ.தெய்வானை வரவேற்றாா். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் சி.கலாவதி துவக்கி வைத்து பேசினாா். மாவட்ட பொதுச் செயலா் எம்.லில்லிபுஷ்பம் அறிக்கை சமா்ப்பித்தாா் வாசித்தாா்

மாநிலத் தலைவா் எஸ்.ரத்தினமாலா, சிஐடியு மாவட்டத் தலைவா் பி.ஜீவா, மாநிலப் பொதுச் செயலா் டி.டெய்சி ஆகியோா் பேசினா்.

இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவராக எஸ்.ராஜம்மாள், மாவட்டச் செயலராக சி.கவிதா, பொருளாளராக என்.தெய்வானை ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில், அங்கன்வாடி ஊழியா்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டுவந்து குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரம், உதவியாளா்களுக்கு ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். பணிவரன்முறையுடன் கூடிய குடும்ப ஓய்வூதியமாக ஊழியா்களுக்கு ரூ. 9 ஆயிரம், உதவியாளா்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்.

ஓய்வுபெறும் ஊழியா்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும். பதவி உயா்வு, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT