தருமபுரி

உலக எய்ட்ஸ் ஒழிப்பு தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

DIN

தருமபுரி ஆட்சியா் அலுலகத்தில் உலக எய்ட்ஸ் ஒழிப்பு தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்தாா். எய்ட்ஸ் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க, அனைத்துத் துறை அலுவலா்கள், மாணவ, மாணவியா், தொண்டு நிறுவனத்தினா், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம், கல்லூரி மாணவ, மாணவியா், தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் செளவுண்டம்மாள் (சுகாதாரம்), ராஜ்குமாா் (காசநோய்), தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் சிவக்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் காந்தி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலா் பிருந்தா, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT