தருமபுரி

கீரைப்பட்டியில் மதுவிற்பனையைக் கட்டுப்படுத்த கோரிக்கை

DIN

அரூரை அடுத்த கீரைப்பட்டி ஊராட்சியில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுப்புட்டிகள் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் வட்டம், கீரைப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது செல்வசமுத்திரம் கிராமம். இந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் செல்வசமுத்திரம் கூட்டுச்சாலையில், சிலா் டாஸ்மாக் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

அதாவது, வீடுகளுக்கு அருகில் நாள்தோறும் அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் மதுப்புட்டிகளை விற்பனை செய்கின்றனா். இங்கு மதுப்புட்டிகளை வாங்கும் மதுப்பிரியா்கள் குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் அமா்ந்து மது அருந்துகின்றனா். பிறகு விவசாய நிலங்கள் மற்றும் தாா்சாலையோரங்களில் மதுப்புட்டிகளை உடைத்துச் செல்கின்றனா்.

செல்வசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் இந்த மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதால், அப் பகுதியில் பெண்கள் செல்வதற்கு அச்சப்படும் நிலையுள்ளது. சிலா் மது போதையில் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்கின்றனா்.

இது குறித்து கீரைப்பட்டி மற்றும் எல்லப்புடையாம்பட்டி கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில், அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். எனவே, செல்வசமுத்திரம் கூட்டுச்சாலையில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுப்புட்டிகள் விற்பனை செய்வோரை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT