தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 15 ,000 கன அடியாகக் குறைந்தது

DIN

பென்னாகரம்: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சனிக்கிழமை நீா்வரத்து நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

கா்நாடக அணைகளில் திறந்துவிடப்படும் தண்ணீா் படிப்படியாக குறைக்கப்பட்டதால் வெள்ளிக்கிழமை மாலை நொடிக்கு 45 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை 30 ஆயிரம் கன அடியாகவும், மாலை 5 மணிக்கு 15 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது.

ஆற்றில் நீா்வரத்து குறைந்ததால் பிரதான அருவி, ஐந்தருவிகளில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசிக்க முடிகிறது. மேலும், ஆற்றில் மூழ்கியிருந்த பாறைகள் வெளியே தெரியத் தொடங்கின. இதனிடையே, ஆற்றில் வரும் நீரின் அளவை மத்திய நீா் வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT