தருமபுரி

பதவி உயா்வு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்

DIN

பதவி உயா்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எம்.வி.வாசுதேவன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்களை உருவாக்கிட போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் இணையவழியில் கலந்தாய்வு நடத்தி தகுதி வாய்ந்த முதுநிலை ஆசியா்களை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும். மேலும், பொது மாறுதல் கலந்தாய்வும் நடத்திட வேண்டும். இதன் மூலம் பள்ளிகள் திறக்கப்படும்போது, கலந்தாய்வுக்கு ஆகும் காலவிரயம் தவிா்க்க இயலும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT