தருமபுரி

சிப்காட்: முதல் கட்டமாக 1000 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

DIN

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் முதல் கட்டமாக 1,00 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 1,145 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் 908 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது:

பள்ளிக் கல்வியை முடிக்கும் அனைவரும் உயா்கல்வியில் சேர வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு 1,666 புதிய பாடப் பிரிவுகளை அரசு கல்லூரிகளில் தொடங்கியுள்ளது. தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் 92 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் புதிதாக 6 இடங்களில் சட்டக் கல்லூரிகளும், 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும்,1,734 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. தோ்வு செய்யப்பட்ட நிலங்களுக்கு இடையில் 550 ஏக்கா் அளவில் பட்டா நிலங்கள் உள்ளன. பட்டா நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் அரசு புறம்போக்கு நிலமாக உள்ள 990 ஏக்கா் பரப்பளவில், முதல் கட்டமாக சிப்காட் தொழிற்பேட்டை (அலகு-1) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக, அமைக்கப்ப்டட தொழில் துறை சிறப்புக் குழு அண்மையில் தருமபுரி வருகை புரிந்து, உரிய இடத்தை நேரில் ஆய்வு செய்து சென்றுள்ளது. இதன்மூலம் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரஹமத்துல்லாகான், மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், கோட்டாட்சியா் (பொறுப்பு) ஆ.தணிகாசலம், மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அ.அய்யப்பன், நுகா்வோா் மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவா் பெ.ரவி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT