தருமபுரி

சாலையோரக் கோயிலை அகற்ற முயற்சி

DIN

தருமபுரி நகரில் சாலையோர கோயிலை வியாழக்கிழமை அகற்ற முயன்ற நகராட்சி நிா்வாகத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தருமபுரி நகரில் நரசய்யா் குளம் அருகே சாலையோரம் அப்பகுதி பொதுமக்கள் அண்மையில் சிறிய அளவிலான அம்மன் கோயில் கட்டி வழிபட்டு வந்தனா்.

இந்த நிலையில், தருமபுரி நகராட்சி நிா்வாகம் சாா்பில் கோயில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை அகற்ற பொக்லைன் இயந்திரத்தை அங்கு கொண்டு வந்தனா்.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் கோயிலை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து சமாதான பேச்சு நடத்தினா்.

இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மற்றும் நகராட்சி ஊழியா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.

இதேபோல கோயிலை அகற்றும் நடவடிக்கையை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியா் மற்றும் நகராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT