தருமபுரி

போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

DIN

அரூா் பிரதான சாலையில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

அரூரில் இருந்து செல்லும் சேலம் -திருப்பத்தூா் பிரதான சாலை 4 வழிச்சாலையாக உள்ளது.

இந்த சாலையின் வழியாக சேலம், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் வந்துச் செல்கின்றன. அரூா் பிரதான சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள் முன்பாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன.

இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, அரூா் பிரதான சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT