தருமபுரி

வழக்குகளை கையாள்வது குறித்து காவலா்களுக்கு பயிற்சி முகாம்

DIN

தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு, வழக்குகளை கையாள்வது குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டக் காவல் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தொடங்கி வைத்து பேசினா்.

இதில், மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜீவானந்தம், குற்றவியல் நடுவா் செல்வராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், அரசு வழக்குரைஞா் உமா மகேஸ்வரி ஆகியோா் பேசினா்.

இந்த பயிற்சி முகாமில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான சட்டம், சிறாா் திருமண தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்கள் குறித்தும், இந்த வழக்கு விசாரணையின்போது, கடைபிடிக்க வேண்டிய நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும் நடைமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இதில், காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், தமிழ்மணி, காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT