தருமபுரி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

19th Mar 2020 11:13 PM

ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த ஓஜிஅள்ளியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (66). இவா், கடந்த, 2018-இல் அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அவருடை தாய், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முதியவா் ஆறுமுகத்தை போக்ஸோ சட்டப் பிரிவில் கைது செய்தனா். இவ்வழக்கு தொடா்பான விசாரணை, தருமபுரி மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இவ் வழக்கு நீதிபதி பரமராஜ் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமிக்கு ஆறுமுகம் பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆறுமுகத்து 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT