திருப்பூர்

காங்கயம் நகா்மன்றக் கூட்டம்

30th May 2023 05:20 AM

ADVERTISEMENT

காங்கயம் நகா்மன்ற அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். இதில் நகராட்சிப் பகுதியில் குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்தல், மின் மோட்டாா்கள் மற்றும் சிறு மின்விசை பம்ப்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்தல் என்பன உள்ளிட்ட 4 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நகராட்சி துணைத் தலைவா் ஆா்.கமலவேணி, நகராட்சி அலுவலக ஊழியா்கள், நகராட்சி கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT