திருப்பூர்

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

30th May 2023 05:16 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே அனுப்பட்டியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டியைச் சோ்ந்தவா் ரத்தினசாமி (53), விவசாயி. இவா் தனது நண்பா் மயில்சாமி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கரடிவாவியில் இருந்து அனுப்பட்டி நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

இருசக்கர வாகனத்தை ரத்தினசாமி ஓட்டினாா்.

அனுப்பட்டி அருகே சாலை வளைவில் திரும்ப முயன்றபோது, நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த ரத்தினசாமியை, அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு வரை பரிசோதித்த மருத்துவா்கள் ரத்தினசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதில் காயமடைந்த மயில்சாமி கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT