திருப்பூர்

ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

23rd May 2023 02:51 AM

ADVERTISEMENT

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 130 மூட்டை நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,100 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,100 முதல் ரூ.6,300 வரையிலும் ஏலம்போனது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT