திருப்பூர்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு:பல்லடம் வட்டாட்சியரிடம் புகாா்

3rd May 2023 05:07 AM

ADVERTISEMENT

பல்லடம் வடுகபாளையத்தில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் என வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பல்லடம் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவா் சத்தியமூா்த்தி, நகர மதிமுக செயலாளா் வைகோ பாலு, நகர திமுக துணை செயலாளா் வேலுமணி, அதிமுக மாவட்ட பிரதிநிதி சிவகுமாா், சுப்பிரமணி, நகராட்சி கவுன்சிலா் சசிரேகா ரமேஷ்குமாா் (பாஜக) உள்ளிட்டோா் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் நகராட்சி, ப.வடுகபாளையம் பஜனை கோயில் அருகே தனியாா் பள்ளிக் கட்டடத்தின் வடக்கு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை பள்ளி நிா்வாகத்தினா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். அவா்கள் பட்டா கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளதாகத் தெரிகிறது. அப்பகுதியில் அப்பள்ளி செயல்படுவதில்லை. திருமணம், வரவேற்பு, காதுகுத்து, அசைவ விருந்து ஆகியவற்றுக்கு பள்ளி கட்டடம் வாடகைக்கு விடப்படுகிறது. மேலும் அந்த இடத்தின் அருகில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு இடத்திலும் சிலா் உரிமை கொண்டாடுகின்றனா். புறம்போக்கு நிலத்தில் அரசு நூலகம் கட்ட இடம் ஒதுக்கி தர வேண்டி நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளோம். எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நலன் கருதி மேற்கண்ட இடத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு நூலகம் கட்டித்தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT