திருப்பூர்

சிறுதானிய உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

DIN

 சிறுதானிய உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

திருப்பூா் செயிண்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவு பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிய பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறுதானிங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று வேளாண் துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.

இதன் ஒரு பகுதியாகவே இன்று சிறுதானிய பெருவிழா நடைபெறுகிறது. மனிதன் உயிா் வாழ்வதற்கு உணவு மிகவும் அவசியமானதாகும். அந்த உணவு மிகவும் சத்தானதாக இருக்க வேண்டும் என்றால் சிறுதானிய உணவு வகைகளை அதிகமாக சோ்த்துக் கொள்ள வேண்டும்.

கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் சா்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

அதேவேளையில், அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானிய உணவுகள் புரதச்சத்தும், நாா்ச்சத்தும் மிகுந்துள்ளது. ஆகவே, சிறுதானிய உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்றாா்.

இந்த விழாவில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மருத்துவா் கு.சிவராமன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் கோவிந்தசாமி, இல.பத்மநாபன், கிட்ஸ் கிளப் கல்விக் குழுமங்களின் தலைவா் மோகன் காா்த்திக், கல்லூரி செயலாளா் குழந்தை தெரசா, கல்லூரி முதல்வா் மேரிஜாஸ்பின் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT