திருப்பூர்

திரெளபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

DIN

பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் உள்ள திரெளபதி அம்மன், தா்மராஜா கோயில் குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் வி.கள்ளிப்பாளையம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தா்மராஜா, திரெளபதி அம்மன் கோயில் பூச்சாட்டு விழா கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பல்வேறு காரணங்களால் பூச்சாட்டு விழா நடைபெறவில்லை. இந்நிலையில், அக்கோயிலில் பூச்சாட்டு பொங்கல் விழா, குண்டம் இறங்குதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி மாவிளக்கு எடுத்தல், திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடா்ந்து வி.கள்ளிப்பாளையம், துத்தாரிபாளையம், வலையபாளையம் பகுதியைச் சோ்ந்த ஏராமான பக்தா்கள் விரதம் இருந்து வெள்ளிக்கிழமை குண்டம் இறங்கினா். இதைத் தொடா்ந்து, அலங்கார பூஜை, அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தினி சம்பத்குமாா், கோயில் தக்காா் ராமசாமி மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT