திருப்பூர்

ரூ.11.72 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.11.72 லட்சத்துக்கு சூரியகாந்தி விதைகள் விற்பனையாயின.

வெள்ளக்கோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாள்தோறும் பல்வேறு பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை சூரிகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. இதில், நாகலாபுரம், பச்சப்பட்டி, ராயா்பாளையம், குஜிலியம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 36 விவசாயிகள் 554 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்னைக்கு கொண்டுவந்திருந்தனா்.

இதில், ஒரு கிலோ சூரியகாந்தி விதை ரூ.39.42 முதல் ரூ.47.62 வரை விற்பனையானது. சராசரியாக கிலோவுக்கு ரூ.44.99 விலை கிடைத்தது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தமாக ரூ.11.72 லட்சத்துக்கு சூரியகாந்தி விதைகள் விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT