திருப்பூர்

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய நபா் கைது

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணை ஏமாற்றிய நபரை காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (38). திருமணமான இவா், தனியாா் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காங்கயம் பகுதியைச் சோ்ந்த 23 வயது திருமணம் ஆகாத இளம் பெண்ணை காதலித்து, திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இளம் பெண்ணை ஏமாற்றிய நபரை புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT