திருப்பூர்

சட்ட விரோதமாக மது விற்பனை: 4 போ் கைது

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தினா். இதில், பொங்கலூா் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜா( 44), முனியசாமி (32), திருப்பூரைச் சோ்ந்த மலையரசன் (43) ஆகியோரை அவிநாசிபாளையம் போலீஸாா் கைது செய்தனா். அதேபோல, கள்ளக்கிணறு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த அம்மு (21) என்பவரை பல்லடம் போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT