திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.36.12 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.36.12 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, திருச்சி, முத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 121 விவசாயிகள் 53 டன் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா். பழனி, காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, முத்தூா் பகுதிகளைச் சோ்ந்த 12 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று கொப்பரைகளை கொள்முதல் செய்தனா்.

ஒரு கிலோ கொப்பரை ரூ.55.15 முதல் ரூ.80.06 வரை விற்பனையானது. சராசரியாக கிலோ ரூ.77.86க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தமாக ரூ.36.12 லட்சத்துக்கு கொப்பரை விற்பனையானதாக வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT