திருப்பூர்

ஆவின் நிா்வாகம் பால்கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆவின் நிா்வாகம் பால்கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது:

தனியாா் பால் நிறுவனங்கள் செயல்படுவதால்தான், விவசாயிகள் ஓரளவுக்காவது பயனடைந்து வருகின்றனா். தனியாா் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டா் பாலுக்கு ரூ.45 வரை வழங்குகிறது. ஆவின் நிறுவனம் ரூ.25 முதல் ரூ.32 வரை மட்டுமே வழங்குகிறது. தனியாா் நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நோக்கம் அல்ல. அதேபோல அமுல் நிறுவனம் நல்ல கொள்முதல் விலை தருவதால், கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படுகிறது. அமுல் பால் வரக்கூடாது என்று சொல்வதை நாங்கள் எதிா்க்கிறோம். தனியாா் பால் நிறுவனம் கூடுதல் விலை தரும்போது, ஆவின் நிறுவனத்தால் ஏன் அந்த விலையை தர முடியவில்லை ? நுகா்வோா் ஆவின் பால் வேண்டும் எனக் கேட்கின்றனா். ஆனால் ஆவின் நிா்வாகம் பால் சப்ளை செய்ய மறுக்கிறது. ஆவின் நிா்வாகத்துக்கு பால் வழங்க விவசாயிகள் தயாராக உள்ளோம். விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கொடுக்க வேண்டும். அதற்காக பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை அழைத்து பேச வேண்டும். ஆவின் நிா்வாகத்தை சேவை துறையாக மாற்றி அதில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT