திருப்பூர்

ரூ7 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் ஆட்சியா் ஆய்வு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசி ஒன்றியம், திருப்பூா் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 7.81 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அவிநாசி கஸ்தூரிபாய் வீதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் அமைக்கும் பணி, நியாய விலை கடை கட்டடம் கட்டும் பணி, செம்பியநல்லூா் ஊராட்சி சின்னமலைக்கவுண்டன் புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டும் பணி, புதுப்பாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையத்தில் அமைக்கப்படும் எண்ணெய் நிறுவனம், கால்நடை தீவனம் தயாரிப்பு நிறுவனம், நாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலறை கூடம், அவிநாசி சந்தைப்பேட்டையில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் அமைக்கப்படும் வீடுகள், நடுவச்சேரி ஊராட்சியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் வீடு, பாப்பாங்குளம் ஊராட்சி முதலிபாளையம் தொடக்கப்பள்ளி, பஞ்சலிங்கம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளியில் ஆகியவற்றில் அமைக்கப்படும் சமையலறை உள்ளிட்ட கட்டடப் பணி, பால்கொள்முதல் நிலையம், அவிநாசி அரசு மருத்துவமனையில் ரூ.5.15 கோடி மதிப்பில் அமைக்கப்படும் மகப்பேறு கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி திருப்பூா் மாநகராட்சி, ஆண்டிபாளையம் குளத்தில் நடைபாதை, கம்பவேலி அமைக்கும் பணி என மொத்தம் ரூ.7.81 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை

ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நாதம்பாளையம் நியாய விலை கடை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகுமாா், மனோகரன். அவிநாசி வட்டாட்சியா் சுந்தரம். உதவிப் பொறியாளா்கள் மனோஜ்குமாா், செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT