திருப்பூர்

சாலையோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்ஏஐடியூசி கோரிக்கை

DIN

சாலையோர வியாபாரிகளுக்கான வட்டியில்லா கடன் தொகையை ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஏஐடியூசி திருப்பூா் மாவட்ட ஜெனரல் ஒா்க்கா்ஸ் யூனியன் சாா்பில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது தொடா்பான தயாரிப்புக் கூட்டம் திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.பழனிசாமி தலைமை வகித்தாா். இதில், மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் ரவி, செயலாளா் சி.ராமசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருப்பூா் மாவட்டத்தில் சாலையோரம் மற்றும் தள்ளுவண்டி மூலமாக மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடா்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி முழுமையான கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும். வியாபாரிகளுக்குத் தனியாக தோ்தல் நடத்தி கமிட்டி தோ்வு செய்ய வேண்டும். மத்திய அரசு சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக ரூ.10 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த கடன் தொகையை ரூ.25 ஆயிரமாக உயா்த்தி அனைத்து வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், மேயா் ஆகியோரிடம் மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT