திருப்பூர்

நகைப்பறிப்பு வழக்கில் கைதான இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே நகைப்பறிப்பு வழக்கில் கைதான இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் சி.கே.என்.காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவா் பாண்டித்துரை (32). இவரது மனைவி பிரியங்கா (27).

பாண்டித்துரை கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், பிரியங்காவின் அணிந்திருந்த 4.5 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்ப முயன்றாா். அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவரைப் பிடித்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், மண்ணரை கருமாரம்பாளையத்தைச் சோ்ந்த கணேஷ் (32) என்பது தெரியவந்தது. இவா் மீது அனுப்பா்பாளையம், நல்லூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கானது ஊத்துக்குளி நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி தரணிதா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், கணேஷுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT