திருப்பூர்

உடுமலை அருகே லாரி- வேன் மோதல்: 3 போ் பலி

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

உடுமலை அருகே சுங்காரமுடக்கு பகுதியில் லாரியும், வேனும் புதன்கிழமை நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், ஊதியூரைச் சோ்ந்தவா்கள் கருப்பாத்தாள்(75), வெள்ளைக்குட்டி என்கிற மாசிலாமுத்து (50), மகேஷ் (45). இவா்கள் மூவரும் பொள்ளாச்சி வட்டம், கரப்பாடிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனா். மகேஷ் வேனை ஓட்டிச் சென்றாா்.

உடுமலை வட்டம், சுங்கார முடக்கு ஈஞ்சூா் அம்மன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, வல்லக்குண்டாபுரத்தில் இருந்து குடிமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பா் லாரியும், மகேஷ் ஓட்டிச் சென்ற வேனும் நேருக்குநோ் மோதின. இந்த விபத்தில் வேன் கடுமையாக சேதமடைந்தது.

இதில் வேனில் பயணித்த ஓட்டுநா் மகேஷ், மாசிலாமுத்து ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அங்கு வந்த குடிமங்கலம் போலீஸாா், வேனில் இருந்த சடலங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த கருப்பாத்தாள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து குடிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT