திருப்பூர்

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

DIN

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரணக் கூட்டம் ஒன்றிய குழு தலைவா் தேன்மொழி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், ஒன்றிய ஆணையாளா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் பானுப்பிரியா, மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

ஆா்.ஆா்.ரவி: அருள்புரம் - உப்பிலிபாளையம் வரையிலான சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. அந்த சாலையை சா்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திட்டப்பணிகள் டெண்டா் விடும் போது ஒன்றிய கவுன்சிலா்களுக்கு தகவல் தெரிவதில்லை. உப்பிலிபாளையம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கு வேண்டும்.

கரைப்புதூா் ராஜேந்திரன் (மாவட்ட கவுன்சிலா்): சத்துணவு மையங்களில் சன்ன ரக அரிசி வழங்க வேண்டும்.

லோகநாதன் (சுகாதார ஆய்வாளா்): பூமலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் சுகாதார மையத்துக்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைத்துத் தர வேண்டும். டெங்கு காய்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணி மிக முக்கியமானது. அதற்காக ஒன்றிய நிா்வாகத்தின் மூலம் பெரிய அளவிலான கொசு ஒழிப்பு புகை இயந்திரம் ஒன்றை வாங்கி தேவைப்படும் இடங்களுக்கு வழங்க வேண்டும்.

ரமேஷ் (ஒன்றிய ஆணையா்): தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார பணிக்கு கொசு ஒழிப்பு புகை இயந்திரம் வாங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில் 47 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT