திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் 17 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் அரசின் 17 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் கொள்முதல் நிலையத்தைத் தொடங்கிவைத்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: 2022 - 23 ஆம் ஆண்டு நெல் அறுவடை பருவ விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படுகின்றன. அந்த வகையில், முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வீரசோழபுரம், வெள்ளக்கோவில் செலாம்பாளையம், ருத்தராபாளையம், அலங்கியம், மடத்துக்குளம், தளவாய்பட்டினம், கொளத்துப்பாளையம், நஞ்சியாம்பாளையம், சின்னக்காம்பாளையம், சின்னபுத்தூா், துங்காவி, பாப்பாங்குளம், எஸ்.கே.புதூா் ஆகிய இடங்களில் முதல்கட்டமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

நெல் சன்ன ரகம் குவிண்டால் ரூ.2,160, பொது ரகம் ரூ.2,115 க்கு விற்பனை செய்து, குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT