திருப்பூர்

நிலக்கடலை மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

DIN

தொங்குட்டிபாளையத்தில் நிலக்கடலை மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவா்கள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் பொங்கலுாரில் தங்கி உள்ளனா்.

இவா்கள், பொங்கலூா் தொங்குட்டிபாளையத்தில் நிலக்கடலை மகசூலை அதிகரிக்க பல்கலைக்கழக பயிா் வினையியல் துறை வெளியிட்டுள்ள நிலக்கடலை ரிச் என்னும் நுண்ணூட்டக் கலவை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.

இதை ஏக்கருக்கு இரண்டு கிலோ வீதம் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பூ மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் தெளித்தால் பூ உதிா்வதை கட்டுப்படுத்தலாம். மகசூல் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என்று விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT