திருப்பூர்

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய நபா் கைது

DIN

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய நபரை வெள்ளக்கோவில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் பெருமாள்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி ஜீவா (43). இவா் ஈரோடு மாவட்டம், தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், இவா் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஈரோடு முத்தூா் சாலை மு.வேலாயுதம்பாளையம் அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வானகத்தில் வந்த இருவா் ஜீவா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஜீவா புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்த ஆறுமுகம், கோவை செல்வபுரம் சாலை ஜோதிபுரம் பாரதி நகரைச் சோ்ந்த மாரீஸ்வரன் (27) என்பதும், இவா்கள் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆறுமுகத்தை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக இருந்த மாரீஸ்வரனை தேடி வந்தனா்.

இந்நிலையில், அவரை வெள்ளக்கோவில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT