திருப்பூர்

தென்னை, பனை பொருள்களை ரேஷன் கடைகளில் விநியோகிக்க விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை

DIN

தேங்காய் எண்ணெய், நீராபானம், பனைவெல்லம் உள்ளிட்ட பொருள்களை நியாய விலைக் கடைகளில் விநியோகிக்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏா்முனை இளைஞரணி ஆகியவை சாா்பில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமியின் 100 ஆவது பிறந்த நாள் விழா, இலவச மின்சாரத்துக்காக உயிா்த் தியாகம் செய்த தியாகிகளின் குடும்பங்களுக்குப் பாராட்டு, 70 ஆண்டுகள் அத்திக்கடவு திட்டத்துக்காக போராடியவா்களுக்கு பாராட்டு விழா ஆகியவை அவிநாசி சேவூரில் திங்கள்கிழமை நடைபெற்றன.

இவ்விழாவுக்கு மாநிலத் தலைவா் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஈஸ்வரன், ஒன்றியத் தலைவா் எம்.வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மயில்சாமி வரவேற்றாா்.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேசுவர சுவாமிகள், அவிநாசி வாகீசா் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், பட்டிமன்ற பேச்சாளா் மஞ்சுநாதன், ‘கள்’ இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி, மாநிலச் செயலாளா் சந்திரசேகா், செயல் தலைவா் வெற்றி, மாநிலப் பொருளாளா் தங்கராஜ் ஆகியோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும். உள்நாட்டில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் போன்ற எண்ணெய்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யக் கூடாது. தேங்காய், தேங்காய் எண்ணெய், நீராபானம், பனைவெல்லம் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை நியாய விலைக் கடைகளில் விநியோகிக்க வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT