திருப்பூர்

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவா்கள் 10, 12 வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றவா்கள் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் 8ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று தேசிய தொழில் சான்றிதழ், தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் பெற்றவா்கள் 10ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தோ்ச்சி பெற்றால் அவா்களுக்கு இணைச் சான்றிதழும், 10ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று பிளஸ் 1, பிளஸ் 2 தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களில் தோ்ச்சி பெற்றால் பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடா்ந்து அரசு தோ்வுகள் இயக்ககத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மொழித்தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்து கொண்டு தோ்ச்சிபெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவா்கள் இணைச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம், முழு விவரம் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதாரா்கள் திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT