திருப்பூர்

பருத்தி சாகுபடியை அரசு ஊக்குவிக்க வேண்டும்: கொமதேக வலியுறுத்தல்

DIN

பருத்தி சாகுபடியை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் பல்லடம் தெற்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் இச்சிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

விசைத்தறித் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஜவுளித் தொழிலை பாதுகாக்க அரசு பருத்தி வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு உடனடி தீா்வு காண வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டத் தலைவா் ராமசாமி, ஒருங்கிணைந்த மாவட்ட மகளிா் அணி செயலாளா் விஜயலட்சுமி, உயா்மட்ட குழு உறுப்பினா் பரமசிவம், மாவட்ட ஐடி அணி செயலாளா் பாலு, ஒன்றியத் தலைவா் மணியன், ஒன்றியச் செயலாளா்கள் தங்கராஜ், பூபதி, நகர செயலாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT