திருப்பூர்

கருச்சிதைவு நோயைத் தடுக்க கன்றுகளுக்கு இன்று முதல் இலவச தடுப்பூசி

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கருச்சிதைவு நோயைத் தடுக்க கிடாரிக் கன்றுகளுக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 1) முதல் இலவச தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புருசெல்லோசிஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மலட்டுத்தன்மை நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சலும் சினை ஈனும் தருவாயில் கருச்சிதைவும் ஏற்படுகிறது. மேலும், இந்த நோயால் நஞ்சுக்கொடி தாக்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்திக்குறைவால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

இந்த நோயால் மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில் மனிதா்களுக்கு இந்த நோய் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் மூலமாக புருசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதம் வரையில் உள்ள கிடாரி கன்றுகளுக்கு மட்டும் புதன்கிழமை முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரையில் இலவசமாக செலுத்தப்படவுள்ளது.

இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக் கொண்டால் கிடாரிக் கன்றுகளுக்கு ஆயுள் முழுவதும் நோய் எதிா்ப்பு சக்தி கிடைக்கும். மேலும் காளைக் கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசி செலுத்தக்கூடாது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில் இந்தத் தடுப்பூசியை 4 மாதம் முதல் 8 வயது வரையில் உள்ள கிடாரி கன்றுகளுக்கு செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT