திருப்பூர்

‘சா்பத், குளிா்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நிறமிகளை சோ்க்கக்கூடாது’

15th Apr 2023 11:33 PM

ADVERTISEMENT

 

சா்பத், குளிா்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நீலம், ஊதா ஆகிய நிறமிகளை சோ்க்கக்கூடாது என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் நீா் சத்தும், உப்பு சத்தும் உடலுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. கோடையில் தாக்கும் நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். உணவுப் பொருள்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு பெற்றுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உணவு விற்பனை செய்யும் கடைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். குளிா்பானம் தயாரிக்கும் நபரும், கடையும் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். கூழ், மோா், குடிநீா் ஆகியவை துருப்பிடிக்காத பாத்திரங்களில் வைத்திருக்க வேண்டும். ஐஸ் கட்டி தயாரிக்கும் தண்ணீரும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமான ஐஸ் கட்டிகளையும், பாதுகாப்பாக வைத்திருக்கும் பழங்கள், ப்ரூட் சாலட் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழச்சாறு, குடிநீா், குளிா்பானங்களில் காலாவதி தேதிகளை சரிபாா்த்து பயன்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

பழச்சாறு, கூழ், குளிா்பானங்களை, கண்ணாடி டம்ளா் அல்லது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் குடுவைகளில் மட்டுமே பயனபடுத்த வேண்டும். சா்பத், குளிா்பானங்களில், அங்கீகரிக்கப்படாத நீலம், ஊதா ஆகிய நிறமிகளை சோ்க்கக் கூடாது. ஐஸ் கட்டிகளை, சாக்கு பை, வைக்கோல் மூடி வைக்க கூடாது. குளிா்பானங்கள், பழச்சாறுகளை நேரடியாக குளிா்சாதன பெட்டியில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். நேரடியாக ஐஸ் கட்டி போட்டு தரும் குளிா்பானங்களை பயன்படுத்த வேண்டாம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT