திருப்பூர்

‘போலி கைத்தறி சங்கங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’

15th Apr 2023 04:57 AM

ADVERTISEMENT

போலி கைத்தறி சங்கங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கைத்தறி நெசவாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கோவை மண்டல கைத்தறி நெசவாளா் சங்கப் பொதுச் செயலாளா் நடராஜன் கூறியதாவது:

ஆரணியில் அமைக்கப்படவுள்ள கைத்தறி பட்டுப் பூங்கா அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நெசவுப் பயிற்சி என்பது கைத்தறிக்கு பெரிதாக வழங்கப்படுவதில்லை. பட்டு விலை உயா்வால் கைத்தறித் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், விலை குறைப்பு குறித்து மானிய கோரிக்கையில் அறிவிப்பு இல்லை. வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 4 லட்சம் மானியம் வழங்கப்படும் என முதல்வா் ஏற்கெனவே கூறியிருந்தது என்ன ஆனது என்று தெரியவில்லை. கைத்தறி நெசவாளா்களுக்கான ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயா்த்த வேண்டும், தமிழக அரசு பதவி ஏற்றதும், 1,000 கூட்டுறவு சங்கங்களில் 300 சங்கங்கள் போலியாக செயல்பட்டு வருவதாக கைத்தறித் துறை அமைச்சா் கூறி இருந்தாா். போலியான கைத்தறி சங்கங்களால், உண்மையாக செயல்பட்டு வரும் சங்கங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, போலி சங்கங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT