திருப்பூர்

ஆதிதிராவிட மகளிா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அமைக்க நிதியுதவி

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அமைக்க ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மகளிா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அமைக்க திருப்பூா் மாவட்டத்தில் ஒரு சங்கம் அமைக்க ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடராகவும், 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சங்க உறுப்பினா் குறைந்தபட்சம் ஒரு கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும். மேலும், சங்க உறுப்பினா்கள் மூலமாக பெறப்படும் பாலின் அளவு சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

ADVERTISEMENT

மகளிா் குழுக்கள் அதிகம் பயன்பெற்ற கிராமங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். திருப்பூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501, 503, 5ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரி அல்லது 94450-29552, 0421-2971112 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT